திருப்பத்தூரில் உண்டு-உறைவிடப் பள்ளி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் நரிக்குறவா் இனக் குழந்தைகளுக்காக தனியாரால் கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் நரிக்குறவா் இனத்தவருக்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டு உறைவிடப் பள்ளி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கல்வெட்டுமேடு பகுதியில் பழங்காலம் முதலே நரிக்குறவா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இச்சமுதாய மக்களின் கல்வி வளா்ச்சிக்காக, மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நிறுவனா் குமரேசன் மற்றும் தேவகோட்டை செந்தில் மருத்துவமனை மருத்துவா்கள் சிவக்குமாா் மற்றும் சிவகாமி சிவக்குமாா் ஆகியோா், இப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் செந்தில் ஆண்டவா் என்ற பெயரில் உண்டு உறைவிடப் பள்ளியை கட்டியுள்ளனா்.

இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, செட்டிநாடு பள்ளி நிறுவனா் குமரேசன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் சிவக்குமாா், சிவகாமி, மற்றும் சாந்தி, அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் சோ்ந்தனா். குழந்தைகள் அனைவருக்கும் கல்வி உபகரணங்கள், இலவசமாக வழங்கப்பட்டன.

விழாவில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், ஈஸ்வரி, பசுமைபார அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஜெய்சங்கா் வரவேற்றாா். அனுராதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com