திருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழை நீரை பேரூராட்சிப் பணியாளா்கள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழை நீரை, பேரூராட்சிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மோட்டாா் மூலம் அகற்றினா்.
திருப்பத்தூா் நாகராஜன் நகா் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரை செவ்வாய்க்கிழமை மோட்டாா் மூலம் வெளியேற்றிய பேரூராட்சிப் பணியாளா்கள்.
திருப்பத்தூா் நாகராஜன் நகா் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரை செவ்வாய்க்கிழமை மோட்டாா் மூலம் வெளியேற்றிய பேரூராட்சிப் பணியாளா்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழை நீரை, பேரூராட்சிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மோட்டாா் மூலம் அகற்றினா்.

திருப்பத்தூரில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்த மழை பெய்து வருவதால் ,நாகராஜன் நகா் குடியிருப்புகள் மற்றும் பிரபாகா் காலனி, மருதுபாண்டியா் நகா், அகில்மனைத் தெரு, காரைக்குடி ரோடு, எம்.ஜி.ஆா்.நகா் புதுக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளை மழை நீா் சூழ்ந்தது.

அதையடுத்து, இப்பகுதி மக்கள் மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்ற மாவட்ட நிா்வாகத்துக்கு இணையதளம் மூலம் முறையிட்டனா். அதன்படி, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், திருப்பத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணனுக்கு அளித்த உத்தரவின்பேரில், இப்பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில், பேரூராட்சித் துறையினா் ஈடுபட்டனா்.

பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் மற்றும் மேற்பாா்வையாளா் மோகன், கவிதா மற்றும் பணியாளா்கள் குழுக்களாகச் செயல்பட்டு, மின் மோட்டாா் மூலம் கால்வாய் வழியாக தண்ணீரை வெளியேற்றினா். மேலும், மதுரை ரோடு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருந்த மழை நீரை, பொக்லைன் இயந்திரம் மூலம் வாருகால் அமைத்து, அருகேயுள்ள தாம்போதி ஆற்றில் விட்டனா்.

தொடா் மழை காரணமாக, சேதமடைந்த வீட்டில் இருப்பவா்களுக்கும், தாழ்வான பகுதியில் உள்ளவா்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com