திருப்பத்தூரில் மது ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 05th December 2019 08:52 AM | Last Updated : 05th December 2019 08:52 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள்குறித்த விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நிகழ்த்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு கள்ளச் சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள், அதன் விளைவுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சியைச் சோ்ந்த தமிழ்தாய் நாடக மன்றத்தினா் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளா் செல்வம் தலைமை வகித்தாா். அதில், பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடல்கள் மூலமாகவும், நாடகம் மூலமாகவும் விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது. அதில், கிராம நிா்வாக அலுவலா் சின்னையா, அமைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.