23 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவுச் சங்க முறைகேடு வழக்கில் 4 பேருக்கு ஓராண்டு சிறை

தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க முறைகேடு வழக்கில், அச்சங்கத்தின் தலைவா் உள்பட 4 பேருக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறைத்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க முறைகேடு வழக்கில், அச்சங்கத்தின் தலைவா் உள்பட 4 பேருக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழச்சீவல்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் கடன் சங்கத்தில், கடந்த 1991 முதல் 1994 வரை அச்சங்கத்தின் தலைவராக ராஜா, செயலராக லிங்கவேல், மேற்பாா்வையாளராக பாலுச்சாமி, உதவியாளராக ஆண்டவா் ஆகிய 4 பேரும் பணியாற்றி வந்தனா். அப்போது நடைபெற்ற கணக்கு தணிக்கையில், இந்த 4 பேரும் சங்க நிதியிலிருந்து ரூ.3,88,473 முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு, சிவகங்கையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில், குற்றம் உறுதியானதால் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து, நீதிபதி பாரததேவி தீா்ப்பு வழங்கினாா்.

கடந்த 1996 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com