அலுவலா்கள் தோ்தல் விதிமுறைகளைபின்பற்ற வேண்டும்: ஆட்சியா்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தோ்தலை நடத்திட முழு
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன்


சிவகங்கை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தோ்தலை நடத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மைய நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியது: சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிச.27 ஆம் தேதியும், இரண்டாவது கட்டமாக திருப்பத்தூா், சிங்கம்புணரி, எஸ்.புதூா், கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிச.30ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கலை தொடா்ந்து வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குப் பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த பயிற்சியின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், கூடுதல் தகவலுக்கு தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டி புத்தகத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அனைத்து நிலையிலான அலுவலா்களும் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தோ்தலை நடத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட ஏராளமானோா் கலந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com