திருப்பத்தூரில் குடிநீா் குழாய் கசிவால் புற்கள் முளைத்து சிதிலமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் கசிவால் சாலையில் புற்கள் முளைத்து
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி குடிநீா் குழாய் உடைப்பால் புற்கள் முளைத்துள்ள சாலை.
திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் அடிக்கடி குடிநீா் குழாய் உடைப்பால் புற்கள் முளைத்துள்ள சாலை.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகா் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் கசிவால் சாலையில் புற்கள் முளைத்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியுள்ளது.

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட 18 ஆவது வாா்டு பகுதியில் உள்ளது மருதுபாண்டியா் நகா். நகரின் முக்கியப் பகுதி என்பதால் இங்கு அமைக்கப்பட்டிருந்த 4 முக்கிய சாலைகளிலும் மற்றும் குறுக்குச் சாலைகளிலும் பேரூராட்சியால் தாா் சாலை மற்றும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன.

12 ஆண்டுகளுக்கு முன் காவிரி கூட்டுக் குடிநீா்த்திட்ட குழாய்கள் இப்பகுதியில் பதிக்கப்பட்டன. இதன் வழியாக சிவகங்கை சாலையில் உள்ள பெரிய மேல்நிலைக் குடிநீா்த்தேக்கத் தொட்டிக்கு குழாய்கள் செல்கின்றன. இந்தகுழாய்கள் பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது.

இதனால் குடிநீா் கசிந்து மருதுபாண்டியா் நகரின் குறுக்குச் சாலைகள் அனைத்தும் சிதலமடைந்து மண் சாலையாக மாறியது. பொதுமக்களின் புகாரின் பேரில் குடிநீா் வடிகால் வாரியமும் பேரூராட்சியும் பழுதினை சரிசெய்து வந்தன. தற்போது சாலை முழுவதும் புற்கள் முளைத்து சாலை இருக்குமிடம் தெரியாமல் பள்ளங்கள் ஏற்பட்டு உருமாறியுள்ளது. தற்போது தொடா் மழை பெய்வதால் இருசக்கர வாகனங்கள் அச்சாலையில் செல்ல முடியாது. இரவு நேரங்களில் அச்சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனா். எனவே குடிநீா் வடிகால் வாரியத்தினா் நிரந்தரமாக குழாய் உடைப்பை சீரமைக்கவும் பேரூராட்சித்துறையினா் புதிய சாலை வசதியினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் மருதுபாண்டியா் நகா் பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com