பள்ளியில் சிறு தொழில் பயிற்சி-கண்காட்சி

காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கலை வளர்ப்போம்

காரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கலை வளர்ப்போம், சிறுதொழில் முனைவோம் என்ற தலைப்பில் மாணவ, மாணவியருக்கு சிறு தொழில் பயிற்சி மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
  பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். 
  இதில் சோப்பு, பினாயில், ஆபரணங்கள், தரை துடைப்பான், அப்பளம், பேப்பர் உறை, பை போன்றவற்றை தயாரித்து மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் காய், கனிகளில் சிற்பம் தயாரித்தல், வாழ்த்து அட்டை, காகிதப் பூக்கள் தயாரித்தல், காய்களில் வர்ணம் தீட்டுதல் போன்றவற்றை செய்து காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர். 
 நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று ஊக்கப்படுத்தினர். 
 மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பலரும் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களை பாராட்டினர். ஆசிரியர் செ. சித்ரா வரவேற்றார். ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com