முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 28th February 2019 07:52 AM | Last Updated : 28th February 2019 07:52 AM | அ+அ அ- |

சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் நிதித்திட்டத்தின் கீழ் பொது சுகாதாரத் துறை சார்பில் காரைக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் தொடக்கி வைத்துப் பேசியது: இந்த மருத்துவ முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏதேனும் நோய் தொற்று கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சையும் பெறலாம். முகாமில் மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் பயனாளிகள் 2 பேருக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 18,000 பெற்றுக் கொள்வதற்கான ஆணையினை எம்.பி. செந்தில்நாதன் வழங்கினார். மேலும் ஏழைப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியையும் அவர் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொது சுகாதாரப் பணிகள் துறை மாவட்ட துணை இயக்குநர் யசோதாமணி,
வட்டார மருத்துவ அதிகாரிகள் ஆனந்தராஜ், கமலேஷ்வரன், பிரவீன்குமார், கூட்டுறவு வங்கி இயக்குநர் சோ. மெய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.