முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடி ஜவுளிக்கடையில் வருமானவரித் துறையினர் சோதனை
By DIN | Published On : 28th February 2019 07:59 AM | Last Updated : 28th February 2019 07:59 AM | அ+அ அ- |

காரைக்குடி - செக்காலைச்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
செக்காலைச் சாலையில் அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட ஜவுளிக்கடையிலும், அதன் பழைய கடையிலும், கடை உரிமையாளரின் வீடு, அவரது உறவினர் வீடு என 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் சென்னையிலிருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரியின் தலைமையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி வருமானவரித்துறை அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர். கடையில் விற்பனைப் பிரிவில் இருந்த ஊழியர்களை முதலில் வெளியேற்றினர். புதன்கிழமை பிற்பகல் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.