Enable Javscript for better performance
சிவகங்கையில் ரூ.2.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை

    சிவகங்கையில் ரூ.2.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published On : 28th February 2019 07:53 AM  |   Last Updated : 28th February 2019 07:53 AM  |  அ+அ அ-  |  

    சிவகங்கை மாவட்ட சமூக நலத் துறையின் சார்பில் பெண்களுக்கான திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 
    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 372 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 47 லட்சத்து 8 ஆயிரத்து 965 மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
    அதனைத் தொடர்ந்து 94 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 400 வீதம் ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.
    இந்நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அலுவலர் வசந்தா, சமூக நலத்துறை கண்காணிப்பு அலுவலர் பாலா, கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், பலராமன், ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கு முன்னதாக சிவகங்கையில் ராமச்சந்திரனார் நினைவு பூங்கா அருகே சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் க.பாஸ்கரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp