சுடச்சுட

  

  காரைக்குடி அருகே பொங்கல் விழாவில் ரஷ்ய மாணவிகள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 13th January 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  காரைக்குடி அருகேயுள்ள மானகிரி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ரஷ்யாவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 9 பேர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
  காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் செயலர் நா. கார்த்திக், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். 
  காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ரத்ததான விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் சத்யன், முதல்வர் சிவக்குமார், முதன்மை நிர்வாகி ஷீலா இம்மாகுலேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  ரஷ்ய மாணவிகள் பங்கேற்பு: காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் மாணவர் பரிமாற்றத்திட்டத்தின் மூலம் ரஷ்யாவைச் சேர்ந்த 8 மாணவியர் 1 மாணவர், 3 ஆசிரியைகள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் எஸ்பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணை நிர்வாக இயக்குநர் கே. அருண்குமார், முதல்வர் ஜிஆர். ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர். மானகிரியில் உள்ள ஸ்ரீ ராஜா வித்ய விகாஸ் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழாவில் பள்ளியின் தலைவர் வீ. அய்யப்பன் தலைமை வகித்தார். 
  தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் தமிழ்கலாச்சார பேரணி மற்றும் பொங்கல் விழா செயலர் ஜேசுராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தேவகோட்டை அருகேயுள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் பொங்கல் விழா தலைமையாசிரியை தனலெட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோலப்போட்டி, உறி அடித்தல் போட்டி நடைபெற்றது. மாநில நல்லாசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai