சுடச்சுட

  


  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளில் சனிக்கிழமை சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது.
  திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரிச் செயலர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கோபிநாத் வரவேற்றார். 
  இவ்விழாவில் 19 துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் தனித்தனியாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாணவிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் முதலியன நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சுவிரட்டு காளைக்கு வேட்டித் துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கபட்டன.
  சமத்துவப் பொங்கல்: திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு தலைமை ஆசிரியர் உதயசங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைமை ஆசிரியர் சிவசைலம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் முருகப்பராஜா வரவேற்றார். அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். 
  கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலிலிருந்து பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண்பானை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பிறகு பள்ளியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். 
  கும்மங்குடி விவேகானந்த பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு கல்லூரிச் செயலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் சுண்ணாம்பிருப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai