சுடச்சுட

  

  திருப்புவனம் சந்தையில் வியாபாரிகளிடம் பேரூராட்சி நிர்வாகம் நேரடி கட்டணம் வசூல்

  By DIN  |   Published on : 13th January 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாரச்சந்தை, தினசரிச் சந்தையில் சனிக்கிழமை முதல் பேரூராட்சி பணியாளர்கள் நேரடியாக கட்டணம் வசூலித்தனர். 
  திருப்புவனத்தில் வாரம் தோறும் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறும். வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகளில் கட்டணம் வசூலுக்கு தனியாருக்கு ஏலம் விடப்பட்டிருந்தன. இந்நிலையில் குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் திருப்புவனத்தில் வாரச்சந்தை, தினசரிச் சந்தைகளில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வியாபாரிகளிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்புவனத்தில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஒலிபெருக்கி மூலம் இதற்கான அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் சனிக்கிழமை முதல் தினசரிச்சந்தையில் பேரூராட்சி பணியாளர்கள் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai