இளையான்குடி கல்லூரியில் மகளிர் மேஜை பந்தாட்டப் போட்டி
By DIN | Published On : 24th January 2019 12:45 AM | Last Updated : 24th January 2019 12:45 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் மகளிர் மேஜை பந்தாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற இப் போட்டியை, ஜாகீர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தொடக்கி வைத்தார். இப் போட்டியில், 6 மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில், பூவந்தி எம்.எஸ்.என். கல்லூரி முதலிடத்தையும், முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லூரி ஆட்சி மன்றப் பொருளாளர் அப்துல் அகமது கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை, இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜ்முதீன், வெற்றி ஆகியோர் செய்திருந்தனர்.