சாலை விபத்தில் பெண் சாவு
By DIN | Published On : 29th January 2019 01:25 AM | Last Updated : 29th January 2019 01:25 AM | அ+அ அ- |

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே உள்ள செய்யாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி ராக்கு(60), இவர் தாயமங்கலம் செல்லும் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராக்கு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் ராக்கு சம்பவ இடத்திலேயே இறந்தார். மானாமதுரை போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.