பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 
இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் எக்ஸ். ஹயாசிந்த் சுகந்தி  ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
இக்கல்லூரி கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, உள்கட்டமைப்புடன் கூடிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், நவீன நூலகம் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன. 
இந்நிலையில், இக்கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக வருடாந்திர ஆய்வு  கடந்த மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதையடுத்து,  பி.இ. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றக்கும் மற்றும் எம்.இ. மேனுபேக்சரிங் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான கடிதமும் பெறப்பட்டுள்ளது. எனவே, இங்கு மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com