சுடச்சுட

  

  மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 
   மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலில் நந்தி தேவருக்கும் மூலவர் சோமநாதர் சுவாமிக்கும் பால், பன்னீர், திரவியம், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், சுவாமிக்கும் நந்திக்கும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. இந்த வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
   ரயில் நிலையம் எதிரே பூர்ண சக்கர விநாயகர் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதியிலும் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. 
   திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்திக்கும் மூலவர் சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. 
   அதன்பின் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள பல சிவ தலங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai