சுடச்சுட

  

  மின் கம்பங்கள் சேமிக்குமிடமாக சங்கராபுரம் தொடக்கப்பள்ளி: மாணவர்கள் தடுக்கிவிழுந்து அவதி

  By DIN  |   Published on : 02nd July 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்குடி வட்டம் சங்கராபுரத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிய மின் கம்பங்களை சேமித்து வைத்திருப்பதால் மாணவ, மாணவியர்கள் தடுக்கி விழுந்து காயமடைவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
    இந்தப் பள்ளியில் சங்காரபுரம், வைரவபுரம் மற்றும் அருகிலுள்ள கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் 35 பேர் பயில்கின்றனர். இங்கு 2 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகாமையில் அங்கன்வாடி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. 
  இப்பள்ளியைச் சுற்றிலும் திறந்தவெளிப் பகுதியாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் இதனை போக்குவரத்துப் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். 
   மேலும் பள்ளி வளாகம் திறந்தவெளியாக உள்ளதால் புதிய மின் கம்பங்களை பள்ளியின் வாயிலை மறைத்து பல மாதங்களாக மின் வாரியத்தினர் அடுக்கிவைத்துள்ளனர். இந்நிலையில் பள்ளியில் இருந்து கழிவறைக்குச் செல்லும் குழந்தைகள் மின்கம்பங்களில் தடுக்கி விழுந்து காயமடைவதாகப் புகார் எழுந்துள்ளது. 
   இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
  எனவே உடனடியாக இந்தப்பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும். மேலும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள இந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்தி உரிய நடவடிக்கை வேண்டும் என்று மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai