ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதில் சிக்கல்
By DIN | Published On : 04th July 2019 08:03 AM | Last Updated : 04th July 2019 08:03 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் ஆதார் பதிவு மையத்தில் பிறந்த தேதி மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் விவரங்கள் பதிவு செய்யப்படும் போது மக்கள் அனைவரும் உத்தேசமாகவே கூறி பதிந்துள்ளனர். மீண்டும் மாற்றம் செய்ய தங்கள் ஆதார் எண் மூலம் ஆதார் பதிவு மையத்தில் விண்ணப்பித்து மாற்றம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக பிறந்த தேதி மாற்றம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதார் பதிவு மைய அலுவலர் கூறுகையில், கடந்த டிசம்பர் வரை பிறந்த தேதியினை மாற்ற முடிந்தது. அதன் பின்னர் எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஹைதராபாத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றனர் என்றார்.