சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காதல் திருமணம் செய்த மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீஸார்  திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 
  திருப்புவனம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த  மஞ்சுளாதேவி (19) என்ற பெண்ணும், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள திருவாதவூரைச் சேர்ந்த கோபால் (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கோபால் பணம், நகை கேட்டு மஞ்சுளாதேவியை கொடுமைப்படுத்தியுள்ளார். அதனால் மஞ்சுளாதேவி அகரம் கிராமத்தில் பெற்றோர்  வீட்டிற்குச் சென்றார். அங்கு கடந்த ஜூன் 24 ஆம் தேதி அவர்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
  இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை கோட்டாட்சியர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும்  திருப்புவனம் போலீஸார்  சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மஞ்சுளாதேவியின் கணவர் கோபாலை போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai