சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில்  கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டார்.
  சிங்கம்புணரி அருகே சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் சின்ன கருப்பன் மகன் குமார் (38). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை  குமார் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மாணவி கூச்சல் போட்டதைத் தொடர்ந்து குமார் தப்பியோடினார். பாதிக்கப்பட்ட மாணவி சிங்கம்புணரி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
  இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் குமார் மீது  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai