சுடச்சுட

  

  மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி 165 கி.மீ பின்னோக்கி நடக்க தொடங்கிய ராணுவ வீரர்

  By DIN  |   Published on : 10th July 2019 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி 24 மணி நேரத்தில் சுமார் 165 கி.மீ. தூரம் பின்னோக்கி செவ்வாய்க்கிழமை நடக்கத் தொடங்கியுள்ளார்.
  சிவகங்கை மாவட்டம் ராஜம்பீரத்தைச் சேர்ந்தவர் சு.பாலமுருகன் (31). இவர் தற்போது அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள இவர் மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பின்னோக்கி நடக்க திட்டமிட்டார்.
  அதன்படி,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ராணுவ வீரரின் பின்னோக்கி நடப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
  இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து பயணத்தை தொடக்கி வைத்தார். 
  அப்போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹிநாதன் ராஜகோபால் உடனிருந்தார்.
  இந்நிகழ்ச்சியில், சிவகங்கை குத்துச்சண்டை கழகத்தின் தலைவரும், சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனருமான நிமலன் நீலமேகம், அரசு மருத்துவர் தங்கதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) காலை 9 மணிக்கு பின்னோக்கி நடக்க தொடங்கிய ராணுவ வீரர் சு.பாலமுருகன் தொடர்ந்து மைதானத்தில் நடந்து கொண்டிருந்தார். அவருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பழச்சாறு வழங்கப்பட்டது. இதுதவிர 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவக் குழு பரிசோதனை செய்தனர். மாலையில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தார்.இரவு முழுவதும் தனது நடை பயணத்தை தொடர்ந்த அவர் 
  புதன்கிழமை (ஜூலை 10) காலை 9 மணியளவில் தனது பயணத்தை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்பின்னர் அவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சான்றிதழ் வழங்க உள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai