சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் விளாக்குளம் கிராமத்தில் மழை பெய்ய வேண்டி புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்கு அந்த கிராம மக்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் அய்யனாரை வேண்டி புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம்.
  அதன்படி நிகழாண்டு விழாவை முன்னிட்டு விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், இளம் வயது பெண்கள் உள்பட ஏராளமானோர் கிராமத்திலிருந்து ஊர்வமாக மானாமதுரைக்கு வந்தனர். 
  அங்கு தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும் பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் புரவிகள் ஊர்வலமாக நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai