சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்  உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் பஞ்சவர்ணம் தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் டெங்கு நோயின் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். பேருந்து நிலையம் முன்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம்  விளக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.  மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai