விதை நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணம் வழங்கல்

சிவகங்கையில் உள்ள அரசு விதைப் பண்ணைக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு தினமணி செய்தி எதிரொலியாக வியாழக்கிழமை பணம் வழங்கப்பட்டது.


சிவகங்கையில் உள்ள அரசு விதைப் பண்ணைக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு தினமணி செய்தி எதிரொலியாக வியாழக்கிழமை பணம் வழங்கப்பட்டது.
பருவகாலங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகளை தரமானதாகவும், மானிய விலையிலும் வழங்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படும் நெல், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண் அலுவலகம் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
அதனை சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள விதைப் பரிசோதனை மையத்தில் முறையாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அதே வளாகத்தில் விதை இருப்பு வைப்பறையில் சேமித்து வைக்கப்படும். பின்னர் பருவகாலங்களில் தேவையான விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், அரசு விதைப் பண்ணைக்கு கடந்த ஜனவரி மாதம் நெல் வழங்கிய சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவத்தியைச் சேர்ந்த கந்தசாமி, திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகளுக்கு 7 மாதமாக பணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நடப்பாண்டு வேளாண் பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தினமணியில் புதன்கிழமை ( ஜூலை 10) செய்தி வெளியானது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பெரியகிளுவத்தியைச் சேர்ந்த கந்தசாமி, திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகளுக்கு நெல் வழங்கியதற்கான தொகை  வியாழக்கிழமை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com