சுடச்சுட

  


  காரைக்குடியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த வியாபாரி வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  காரைக்குடி வ.உ.சி. சாலையில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் கோபால் (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனநிலையில் இரும்பு வியாபாரம் செய்து வந்தாராம்.  இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கோபால் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டின் அருகில் உள்ள தனது அலுவலகத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் தந்தை சத்தியமூர்த்தி அளித்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai