சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன், அன்னை வீரமாகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு


சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன், அன்னை வீரமாகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.
இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பந்தயத்தில் பங்கேற்க வந்த மாட்டு வண்டிகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. 
பின்னர் சிவகங்கை- மதுரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில்  சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 8 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 16 வண்டிகளும் பங்கேற்றன. இதேபோன்று, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பந்தயத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு என்ற நிலையில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் பந்தயங்களை சிவகங்கை, கொட்டகுடி, மானாகுடி, முத்துப்பட்டி, கொன்னக்குளம், பில்லூர், கோவானூர்,சித்தலூர், பனையூர், கரும்பாவூர் ஆகிய பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com