மானாமதுரையில் ஜூலை 27 இல் சார்பு நீதிமன்றம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இம்மாதம்  27 ஆம் தேதி சார்பு நீதிமன்றம் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட நீதிபதி வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். 


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இம்மாதம்  27 ஆம் தேதி சார்பு நீதிமன்றம் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட நீதிபதி வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
மானாமதுரையில் காந்திசிலை எதிர்புறம் நீதித்துறைக்கு சொந்தமான ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சார்பு நீதிமன்றம் தொடர்பான வழக்கு விசாரணைகள் சிவகங்கை சார்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் மானாமதுரையில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இங்கு சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் மானாமதுரை அண்ணாசிலை அருகே கோவிலூர் மடத்துக்கு சொந்தமான கட்டடம் சார்பு நீதிமன்றம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் இங்கு நீதிமன்றம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இப் பணிகள் நிறைவடைந்துள்ளதை யடுத்து,  மானாமதுரையில் வரும் 27 ஆம் தேதி சார்பு நீதிமன்றம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஹேமலதா நீதிமன்றத்தை திறந்து வைக்கிறார். பின்னர் திறப்பு விழா நிகழ்ச்சிகள் காந்திசிலை எதிர்புறம் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் மானாமதுரை வந்து சார்பு நீதிமன்றம் செயல்பட உள்ள கட்டடத்தை பார்வையிட்டு உள்ளூர் வழக்குரைஞர்கள் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுடன் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com