செளமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா ஜூலை 25 இல் தொடக்கம்
By DIN | Published On : 24th July 2019 07:07 AM | Last Updated : 24th July 2019 07:07 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற உள்ளது.
இந்த விழா வியாழக்கிழமை மாலை சேனை முதல்வர் புறப்பாட்டுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஆண்டாள் திருவீதி புறப்பாடும், அதனைத் தொடர்ந்து தினமும் காலை சுவாமி, அம்மன் புறப்பாடும், இரவு சுவாமி ஆண்டாளுடன் சிம்ம, கருட, ஆஞ்சநேயர், குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். 7 ஆம் நாள் விழாவில் ஆண்டாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்வும், 9 ஆம் நாள் விழாவில் தலையலங்கார வைபவமும், 10 நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற உள்ளது.