Enable Javscript for better performance
அகழாய்வுப் பணிகள் தீவிரம்: கீழடியில் தங்கும் தொல்லியல் ஆய்வாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அகழாய்வுப் பணிகள் தீவிரம்: கீழடியில் தங்கும் தொல்லியல் ஆய்வாளர்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணி தீவிரமடைந்துள்ளதால், தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
      கீழடியில் நான்குகட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்து, கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதற்காக அரசு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 5 ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்து பானைகள், ஓடுகள், அழகுசாதனப் பொருள்கள் உள்ளிட்டவை கிடைத்தன. 
    மேலும் இரட்டைச் சுவர் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது அரண்மனைச் சுவரா அல்லது கோட்டைச் சுவரா என்பதை இதுவரை கண்டறியமுடியவில்லை. சுவரின் தொடர்ச்சியயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது நடந்து வரும் அகழாய்வுக்காக 10-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவ்வப்போது ஜி.பி.ஆர். எனப்படும் புவி ஊடுருவும் கருவி மூலம் பூமிக்கடியில் இருப்பவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
     5 ஆம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் மதுரையில் தங்கியிருந்து தினமும் கீழடிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
     தற்போது அகழாய்வுப் பணி தீவிரமாக நடந்து வருவதை முன்னிட்டு அவர்கள் கீழடியில் தங்கியிருந்து அகழாய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அகழாய்வு நடந்து வரும் பகுதியில் துணியால் கூடாரம் அமைத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai