Enable Javscript for better performance
சிவகங்கையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கருப்பு வில்லை அணிந்து சிவகங்கையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை அரண்மனை வாசல் முன் மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் பாக்கியமேரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உதயநிலா முன்னிலை வகித்தார். இதில்,அச்சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர்.வாசுகி, சிஐடியூ தொழிற்சங்க சிவகங்கை மாவட்டச் செயலர் வீரையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும், பிறதுறை பணிகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தாமரைச் செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai