Enable Javscript for better performance
செஞ்சை மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செஞ்சை மாரியம்மன் கோயிலில் மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டி செவ்வாய்க்கிழமை இரவு விளக்கு பூஜை நடைபெற்றது.
    இவ்விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு தைலம்,திருமஞ்சனம், பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விஷேச அலங்காரத்துக்கு பின் ஆராதனைகள் நடைபெற்றன.
    அதனைத் தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்கவும் கோயில் முன்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். விழா நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai