Enable Javscript for better performance
திருப்புவனம் அருகே அரசுப்பேருந்து டயர் வெடித்து விபத்து: 5 மாணவிகள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புவனம் அருகே அரசுப்பேருந்து டயர் வெடித்து விபத்து: 5 மாணவிகள் காயம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு நகரப் பேருந்தின் டயர் வெடித்ததால், பேருந்தினுள் கம்பிகளில் மோதி பள்ளி மாணவிகள் 5 பேர் காயமடைந்தனர். 
     திருப்புவனம் அருகே உள்ள டி.பறையன்குளம் கிராமத்திலிருந்து புதன்கிழமை காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இதில் திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏராளமான மாணவிகள் பயணம் செய்தனர். வாவியரேந்தல் விலக்குப் பகுதியில் வந்தபோது, பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததில் பேருந்து குலுங்கி நிலைதடுமாறியது. பின்னர் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு பேருந்தை நிறுத்தினார். பேருந்து குலுங்கியதால் பேருந்து கம்பிகளில் மோதி 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அட்சயராணி, சுபத்ரா, அனுஷா, கவிதா, மணிஷா ஆகிய 5 மாணவிகளும் காயமடைந்தனர். இவர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த கவிதா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai