Enable Javscript for better performance
படைப்புழு தாக்கத்திலிருந்து  மக்காச்சோளத்தை காக்க விவசாயிகளுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    படைப்புழு தாக்கத்திலிருந்து  மக்காச்சோளத்தை காக்க விவசாயிகளுக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 25th July 2019 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே தோப்படைப்பட்டியில் விவசாயிகளுக்கு மக்காச்சோள படைப்புழு தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    படைப்புழுத் தாக்குதல் அதிகரித்ததால், கடந்தாண்டு மக்காச்சோளம், சோளம், கேழ்வரகு, கம்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறையினர், இடுபொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.
    அதன்படி கமுதி அருகே தோப்படைபட்டியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர்ப் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர் மற்றும் வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் செயல்விளக்கம் அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai