Enable Javscript for better performance
மானாமதுரை பேரூராட்சியில் ஊருணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணி தீவிரம்: பொதுமக்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை பேரூராட்சியில் ஊருணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணி தீவிரம்: பொதுமக்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 25th July 2019 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் மழை நீரை சேகரிக்க ஊருணிகள், வரத்துக் கால்வாய்கள் புனரமைப்பு பணி வேகமாக நடந்து வருவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். 
    மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் பருவமழை பெய்யும்போது மழைநீரை சேகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பேரூராட்சி பகுதியில் உள்ள செட்டி ஊருணி, சுக்கான்ஊருணி, மட்டை ஊருணி உள்பட தூர்ந்து கிடந்த 8 ஊருணிகளை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 
    மேலும் மழைக்காலங்களில் இந்த ஊருணிகளுக்கு தண்ணீரைக் கொண்டுவந்து சேர்க்கும் வரத்துக்கால்வாய்களும் தூர்வாரப்படுகின்றன. 
    மேலும் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 
     மழை வளத்தைக் காக்கும் வகையில் பேரூராட்சி பகுதியில் தினமும் மரக்கன்றுகள் நடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 
     இது குறித்து மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கூறியதாவது: 
    தமிழக முதல்வர் உத்தரவின்படியும் பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தலின்படியும் மானமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    நகரிலுள்ள 8 ஊருணிகளை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. மழை வளத்தை காக்கும் வகையில் நகரில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு முதல்கட்டமாக 500 மரகன்றுகள் நடப்பட்டுள்ளன.  
    தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ள ஊருணிகளுக்கு இனி மழைத்தண்ணீர் தங்குதடையின்றி வந்து சேரும். பொதுமக்களிடமும் மழைநீரை சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார். 
     மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைத்தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai