Enable Javscript for better performance
ரயில்வே அங்கீகாரத் தேர்தல்: எஸ்.ஆர்.இ.எஸ். மானாமதுரை கிளை நிர்வாகிகள் வாக்குசேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே அங்கீகாரத் தேர்தல்: எஸ்.ஆர்.இ.எஸ். மானாமதுரை கிளை நிர்வாகிகள் வாக்குசேகரிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே தொழிற்சங்கத்துக்கான அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு எஸ்.ஆர்.இ.எஸ் தொழிற்சங்கத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளை நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். 
    ரயில்வே தொழிற்சங்கத்தின் அங்கீகாரத் தேர்தல் இம் மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி எஸ்.ஆர்.இ.எஸ் (தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்) மானாமதுரை கிளையைச் சேர்ந்த மேலக்கொன்னக்குளம், நெடுங்குளம், பனங்காடி, நாட்டசன்கோட்டை, சிவகங்கை,தேவகோட்டை ரஸ்தா, கல்லல், காரைக்குடி, அரண்மனைசிறுவயல் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களை சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜாராம் தலைமையில் மதுரை கேட்டச் செயலாளர் கஜ்னா,  உதவிச் செயலாளர் ஐயப்பன் மானாமதுரை கிளைச் செயலாளர் மணிவண்ணன், துணைத் தலைவர் குமரேசன், பொருளாளர் மோகன், உதவிச் செயலாளர்கள்  ஐயப்பன்,சந்தோஷ், கௌதம் சங்கர், சரவணன், பவுன் ஆகியோர் சந்தித்து ரயில்வே தொழிலாளர்களுகாக எஸ்.ஆர்.இ.எஸ் சங்கம் ரயில்வே நிர்வாகத்திடம் போராடி பெற்றுத்தந்த உரிமைகளை விளக்கிக்கூறியும்  நடைபெறவுள்ள ரயில்வே தொழிற்சங்கத்துக்கான அங்கீகாரத் தேர்தலில் எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தின் சின்னத்தை ஆதரிக்க கேட்டும் வாக்கு சேகரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai