Enable Javscript for better performance
ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி

    By DIN  |   Published on : 25th July 2019 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணி தூர்வாரும் பணி தொடங்கியது.
    திருப்பத்தூர் அச்சுக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணி மிகவும் பழைமை வாய்ந்ததாகும். பெரிய கண்மாய்க்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஊருணி. பெரிய கண்மாயில் நீர்வரத்து அதிகமாகும் போது முதலில் நீர் நிரம்பும் ஊருணியாகத் திகழ்ந்தது. இப்பகுதியைச் சுற்றிலும் வீட்டுமனைகள் அதிகரித்ததால் ஊருணி பராமரிப்பு கைவிடப்பட்டது.
    இந்நிலையில் ஷேக்இமாம் ரிஷால்தார் தர்காவின் தலைவர் அல்லாபாக்ஸ், பாபா அமீர்பாதுஷா ஆகியோர் ஊருணியைத் தூர்வார வேண்டும் 
    என  வட்டாட்சியரிடம் முறையிட்டனர். 
    அதன்பேரில் தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம்  இந்த ஊருணி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 
    இப்பணியினை திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி தலைமையிலான வருவாய்த் துறையினர், தேவேந்திரகுல மாநிலத் தலைவர் க.சின்னையா மற்றும் தர்கா நிர்வாகிகள் அமீன், அபுதாகிர், அப்துல்காதர் ஆகியோர் பார்வையிட்டனர்.  
    மேலும் திருப்பத்தூர் பகுதியைச் சுற்றிலும் 20 க்கும் மேற்பட்ட ஊருணிகள், குளங்கள், குட்டைகள் போன்றவை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. அனைத்துப் பகுதி நீர்நிலைகளும் மழைக்காலத்திற்கு முன்கூட்டியே தூர்வாரப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. 
    எனவே பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையும் முயற்சி மேற்கொண்டு கண்மாய், ஊருணிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai