முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிங்கம்புணரி அருகே பைக் மீது கார் மோதி ஆசிரியர் பலி
By DIN | Published On : 30th July 2019 09:08 AM | Last Updated : 30th July 2019 09:08 AM | அ+அ அ- |

சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஆசிரியர் உயிரிழந்தார்.
கல்லல் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜான்பிரிட்டோ (49). அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பு தொடங்கப்பட்டதால் இவர் மாற்றுப்பணியாக எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி நடுநிலைப்பள்ளிக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் திங்கள்கிழமை கொட்டாம்பட்டியிலிருந்து வழக்கம்போல் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரான்பட்டி விலக்கு அருகே வந்தபோது, எதிரே காஞ்சிபுரத்திலிருந்து மதுரை நேக்கி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து புழுதிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மனைவி சாந்தா கல்லல் ஒன்றியத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.