முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் ஆக. 8 முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
By DIN | Published On : 30th July 2019 09:07 AM | Last Updated : 30th July 2019 09:07 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் ஆக. 8 முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு தழுவிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஆகவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் குடற்புழு நீக்க மாத்திரையின் தன்மை குறித்து தங்களது பிள்ளைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறி அவற்றை தவறாது சாப்பிட அறிவுறுத்த வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.