முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரையில் இலவச பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 09:08 AM | Last Updated : 30th July 2019 09:08 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.கணேசன், ஒன்றியத் தலைவர் ஏ.முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வீடு கட்ட இடம், வீட்டுமனைப் பட்டா, வீடுகட்ட நிதி உதவி வழங்க வேண்டும். வறுமைக்கோடு பட்டியலை சரிபார்த்து தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கே.தங்கமணி, மாவட்டத் தலைவர் பி.விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் என்.சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கண்ணகி, ஒன்றியச் செயலாளர் கே. ஆறுமுகம், நகரச் செயலாளர் நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணி, ஒன்றியச் செயலாளர் ஜி.சங்கையா உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.