இளையான்குடியில் குடிநீர் பிரச்னையத் தீர்க்க  நடவடிக்கை: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்

இளையான்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க

இளையான்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதன்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டுக்கு காந்திமதி சேதுராமன் தலைமை வகித்தார். சங்க மாநிலச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
மாவட்ட நிர்வாகிகள் சண்முகப்பிரியா, பாக்கியமேரி, சாந்தி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினர். ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். 
இந்த மாநாட்டில் இளையான்குடி பகுதி மாதர் சங்கத்தின் புதிய தலைவராக மரியசெல்வம், செயலாளராக ஜெயந்தி, பொருளாளராக ரெத்தினம்மாள், துணைத் தலைவர்களாக கமலி , குப்பம்மாள், துணைச் செயலாளர்களாக விஜி, இந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில், இளையான்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com