தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க வலியுறுத்தி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் நிலவி வரும் கடும் தண்ணீர் த

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாக்கோட்டை ஒன்றியக் குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் எஸ். பாண்டித்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர்கள் சி. பெரியசாமி, பி. பாண்டிமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். குணசேகரன், மாவட்டச் செயலர் எம். கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தேத்தாம்பட்டிக் கிராமத்தில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டும் குடிநீருக்கு தீர்வு காணாமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கும் நிலை உள்ளதை நீக்கவேண்டும். இதேபோன்று நங்கபட்டி கிராமத்திலும் உள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கவேண்டும். 26 ஊராட்சிகளிலும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தேவையான தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எம். சிதம்பரம், ஒன்றியக் குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com