திருப்பத்தூரில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் பசுமை பாரதம் அமைப்பு, வர்த்தக சங்கம் மற்றும் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் வானத்தை தொட்டுவிடலாம் வா என்ற தலைப்பில் கற்றல் திறன் பயிற்சி, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு, மரக்கன்று வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு கிறிஸ்துராஜா பள்ளி முதல்வர் ரூபன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் லெட்சுமணன் பசுமை பாரத அமைப்புச் செயலர் நா.க.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ்செழியன், பொறியாளர் அருணாச்சலம், அரிமா ரெங்கசாமி, நல்லாசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கற்றல் திறன் பயிற்சி கின்னஸ் சாதனையாளர் ராஜேஷ் பெர்னாண்டோ 1500 மாணவர்களுக்கு வானத்தைத் தொட்டு விடலாம் வா என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சாதனை மாணவர்களுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com