காரைக்குடியில் நாளை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 24th June 2019 07:29 AM | Last Updated : 24th June 2019 07:29 AM | அ+அ அ- |

காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காரைக்குடி கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.