தென்காசி, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு  சிறப்புக் கட்டண ரயில்

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளம்  - வேளாங்கண்ணி சிறப்புக் கட்டண ரயில் (06015) ஜூலை 6, 13, 20, 27 ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் காலை 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். எதிர் திசையில் இந்த ரயில் (06016) ஜூலை 7,  14, 21, 28 ஆம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.15-க்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.
இந்த ரயில் திருப்புனித்துரை, கோட்டயம், செங்கனச்சேரி, திருவலா, செங்கனூர், மாவேலிகரை, காயன்குளம், கொல்லம், குண்டாரா, கொட்டாரக்கரை, அவனேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும். 
இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com