சுடச்சுட

  

  காரைக்குடிக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வந்தார்.
    காரைக்குடியில் உள்ள சங்கர மணி மண்டபத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்த சுவாமிகளை காரைக்குடி சங்கர மடத்தின் அறங்காவலர் ஆடிட்டர் ராம்மோகன் வரவேற்றார். மற்றொரு நிர்வாகி சுந்தரி வைத்தியநாதன் முக்கிய விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார். 
      நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக வந்து சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். தொழிலதிபர் பிஎல்.படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ சுப.துரைராஜ், காரைக்குடி முக்கிய பிரமுகர்கள் பொன் துரை, பி.வி.சுவாமி, தமிழிசைச்சங்க செயலாளர் வி.சுந்தரராமன், மகரிஷி பள்ளித் தாளாளர் ஆர்.கே. சேதுராமன், காரைக்குடி சங்கர மடத்தின் மேலாளர் விஸ்வநாத அய்யர், வித்யாகிரி பள்ளித்தாளாளர் ஆர். சுவாமிநாதன், காஞ்சிபுரம் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், திருவனந்தபுரம் மட மேலாளர் ஆர்.கே. சர்மா, பிராமணர் சங்க நிர்வாகிகள் பலரும் விஜேயந்திரரிடம் ஆசிபெற்றனர். செக்ரி விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
  பள்ளி கட்டடம் திறப்பு
  முன்னதாக சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக். பள்ளியில் புதிய கட்டடத்தை, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்து அருளாசி வழங்கினார். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். 
   இவ்விழாவில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம. அருணகிரி, சுப்புராம், திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி,  மாவட்ட கல்வி அலுவலர் பரமதயாளன், எஸ்.எம்.எஸ். பள்ளித் தாளாளர் பி.எல். அழகுமணிகண்டன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.    
      முன்னதாக, பள்ளி நிறுவனர் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றார். முடிவில், பள்ளிச் செயலர் குணாளன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai