சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்தார்.
    சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை அனைத்து துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியது: 
      மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடத்தில் ஒளிரும் வில்லைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த வேண்டும். ஆறு மற்றும் நிலங்களில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு தீவிர கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
      இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai