சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 28-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

    By DIN  |   Published on : 26th June 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
       இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
      இதில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2019-2020 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுவது, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் தடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியன குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தி, தீர்மானமாக நிறைவேற்றலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai