சிவகங்கையில் அஞ்சலகத்தின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 28th June 2019 06:38 AM | Last Updated : 28th June 2019 06:38 AM | அ+அ அ- |

சிவகங்கை காந்தி வீதியில் உள்ள அஞ்சலக கிளை அலுவலகத்தின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, ரூ.10 ஆயிரத்து 48-யை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை காந்தி வீதியில் இந்திய அஞ்சலகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு "போஸ்ட் மாஸ்டராக' முருகானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் புதன்கிழமை மாலை வழக்கம் போல் அஞ்சலகத்தை பூட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை அலுவலகத்தை திறந்து பார்த்த போது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு அலுவலகத்திலிருந்த ரூ.10 ஆயிரத்து 48 திருடுப் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.