சுடச்சுட

  

  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: காரைக்குடி தொழில் வணிக கழகம் வரவேற்பு

  By DIN  |   Published on : 16th March 2019 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு காரைக்குடி வழியாக புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதற்கு காரைக்குடி தொழில்வணிகக்கழகம் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவர் சாமி.திராவிடமணி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கேரளா மாநிலம் எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணிக்கு புதிய சிறப்பு ரயில் (எண்: 06015) வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் இயக்கப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஒருநாள் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஏப். 6 இல் எர்ணாகுளத்தில் காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். காரைக்குடிக்கு இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு வரும்.
  மறுமார்க்கத்தில் ஏப்.7-ஆம் தேதி மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு(வண்டி எண்: 06016) இரவு மணி 11.20-க்கு காரைக்குடிக்கும், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளமும் சென்றடையும்.
  இந்த ரயில் வரும் ஜூன் மாதம் 29-ஆம் தேதிவரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பு கிடைக்கப்பெற்றால் நிரந்தரமாக இந்த ரயில் இயக்கப்படலாம் என்று ரயில்வேத்துறை சார்பில் தெரியவருகிறது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai